Sunday, December 24, 2006
என் செய்யும் என் உடலை...
வறுமையும் அழகும்
வளமும் அழுக்கும் காரணங்களாம் கற்பளிப்பு...
சமுதாயம் எனக்களித்தஅன்பளிப்பு!
வேசியாக்கி விட்டார்கள்
வாடிக்கையாளர்கள்!
இருள் மாய்ந்த உலகம்
ஒழுங்கீனம் இங்கு தர்மம்!
அழகு சந்தைப் பொருள்
அளவில்லா கொடுமைகள்!
உடல் சுவைக்கும் சமுதாயமே…
என் மனச்சுமைக்கு?
வதைகள் புதைக்கப்படும் நடவடிக்கை…
உதைகள் பெரும்பாலும் வாடிக்கை!
உதைத்திருப்பான்
நரகம் என்றாலும் நான் நகைத்திருப்பேன்
காதுகள் கேளாவார்த்தைகளால்
காகிதமாக என்னை கசக்கி விடும்…
ஒதுங்க நினைத்து ஓட முற்பட
கண்ட சுகம் காண சமுதாயம்
எனக்களித்த தலைப்பு…"பெரிய கண்ணகி இவ"
உடல் காயம் காயும்
மன ரணம் மரணம்
என் இனிய சமுதாயமே!
ஓர் இனிய என் கொலை
பின் என் செய்யும்
என் உடலை!
1 comment:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.
Post a Comment