பெண்மை
ஆக்கம் முதல் அழிவு வரை
எத்தனை தாக்கம்
இந்த பெண்கள் !
பொழுதுகளில் மாறிவிடும் உணர்வுகள்
புரியாத உணர்ச்சி வெளிப்பாடுகள்
இவர்கள் - விடுகதை
விடை - விஸ்வரூபம் !
இந்த வளைவுகளில் முந்தாதீர்
வடிவமைப்பு வேதியல் படைத்தவனுக்கே
கேள்விக்குறி !
சூத்திரங்கள் புரிந்தாலும்
பெண்களும் எண்களை போல
கடினப் படுத்தும் கணக்குகள் !
இவர்களை இவர்களால்
ஆண்மை ஆளப்படுவதும், அடிமைப் படுவதும்
வானியல் அறிவுப்புகள் போல !
கோபங்களில் சமத்துவம் பேசும்
வெறுமைகளில் சண்டையும்,
பொறுமைகளில் சந்தேகமும்
தயாரிக்கும் இவர்கள்
அன்பின் அடையாளங்கள் !
இன்பமும் இவர்களே
துன்பமும் இவர்களே !
என் வேண்டுதல் எல்லாம்
கலாச்சார மாறுதல்கள்
இவர்களை மாற்றினாலும்
பெண்மை மாறாது இருக்கட்டும்.
by rasamby.
No comments:
Post a Comment