Saturday, May 07, 2016

Monkey and Politics

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, "குரங்குகளுக்குமனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார். ஆச்சர்யமாய் இருந்தது..விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்..."சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான்குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாககைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன... வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன... எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளர விடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது" என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது...! -

இலவச அரிசி வாங்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மின்விசிறியைப் போட்டு இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்மஊர் மக்களுக்கும், இது தான் நடக்கிறது!உழைக்கவே மனம் வருவதில்லை!"

மேட்டர்" என்னவோ குரங்கு பற்றித்தான்.☆☆☆
படித்ததில் பிடித்தது.

No comments: